பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வாஷிங்டனில் திருமணம் I 'நீங்கள் எதையும் ஹார்ட்லே வச்சுக்கக் கூடாது. இது உங்க வீட்டுக் கல்யாணம். எனக்குப் பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டும் ஒண்ணுதான். வாங்க, வாங்க... பஞ்ச், மாமாவுக்கு ஒரு கார் கொண்டு வரச் சொல்லு' என்றாள் மிஸஸ் ராக். இதைக் கேட்டதும் மாமாவின் உச்சி குளிர்ந்து போயிற்று உடனே, "அடே ராஜா!... முகூர்த்தத்துக்கு நேரமாச்சு. உம். உம் புறப்படு' என்று மாப்பிள்ளையைத் துரிதப்படுத்தினார். வெளியே வந்த மிஸஸ் ராக், பஞ்சுவைப் பார்த்து, 'வாட் பஞ்ச் ஷம்பந்தி ஷண்டய் இவ்வளவுதானா?" என்று கேட்டாள். 'இவ்வளவுதான் மேடம்! இப்படித்தான் ஒன்றுமில்லாத அற்ப விஷயத்துக்கெல்லாம் சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமே நின்றுவிடுமோ என்று கூடத் தோன்றிவிடும். விசாரிக்கப் போனால் விஷயம் ஒன்றுமிருக்காது. அநேகமாகக் காப்பியில்தான் தகராறெல்லாம் கிளம்புவது வழக்கம்' என்றான். 'அங்கிள் ஸாம் nம்ஸ் டு பி வெரி மிஸ்சுவஸ் இவரை ரொம்ப உஷாரா கவனிச்சுக்கணும்' என்றாள் மிஸஸ் ராக். 'கார் கொடுப்பதாகச் சொல்லி விட்டீர்கள் அல்லவா! அது போதும்; இனி எல்லாக் கோபமும் தீர்ந்துவிடும்' என்றான் பஞ்சு. மாப்பிள்ளை ராஜகோபாலன் பரதேசிக் கோலம் புறப்படுவதற்குத் தயாராக நின்றான். அங்கிள் ஸாம் மிகவும் உற்சாகத் தோடு புதுக் குடையைப் பிரித்து மாப்பிள்ளையின் தலைக்கு நேராகப் பிடித்தார். மாப்பிள்ளைத் தோழன் விசிறியைக் கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தான். நாதஸ்வரக்காரர்கள் முன்னால் செல்ல, ஆடவரும், பெண்டிரும் பின் தொடர, மாப்பிள்ளை மை தீட்டிய விழிகளுடன் காசிக்குப் புறப்பட்டார்.