பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 147 பார்க்கப் பெரும்கூட்டம் கூடிவிட்டது. சம்பந்திச் சண்டை முற்றிவிட்டது என்ற சேதியைக் கேள்விப்பட்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் தன்னுடைய சிநேகிதர்களை எல்லாம் கூட்டிக் கொண்டு ஓடோடிச் சென்றாள். சம்பந்தி வீட்டு மாமாவும், அய்யாசாமி அய்யரும் மல்யுத்தத்துக்கு நிற்பவர்களைப் போல் சீறிக் கொண்டிருந்தார்கள். - 'வாட் பஞ்ச் அங்கிள் ஸாம் என்ன சொல்கிறார்?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'முகூர்த்தம் நடக்காதாம். பார்த்து விடுகிறேன் ஒரு கை என்கிறார்' என்றான் பஞ்சு. மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு கவலை வந்துவிட்டது. கல்யாணமே நின்று விடுமோ என்று அஞ்சினாள். 'சம்பந்திச் சண்டையை நிறுத்த என்ன் செய்யலாம் பஞ்ச்?' என்று வேதனையோடு விசாரித்தாள். 'ஒன்றுமில்லை மேடம்! நீங்க மாமாவைப் பார்த்துப் பேசிவிட்டால் போதும் எல்லாம் சரியாய்ப் போய்விடும்' என்றான் பஞ்சு. உடனே மிஸஸ் ராக்ஃபெல்லர் கோபமாக நின்று கொண்டிருந்த மாமாவின் அருகில் சென்று அவர் கைகளைக் குலுக்கி, 'வெரி லாரி மிஸ்டர் ஸாம். ஏதோ தெரியாமல் நடந்து போச்சு, எக்ஸ்க்யூஸ் மி எழுந்து வாங்க; முகூர்த்தத்துக்கு நேரமாச்சு' என்றாள். - அவ்வளவுதான்; மாமாவின் கோபம் மாயமாக மறைந்துவிட்டது முகத்தில் அசடு வழிய, - “எனக்கொன்றும் கோபமில்லை. இந்தப் பெண்டுகள் தான் பவுடர் பால் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்ன வேலை?” என்றார் இகு {f} fti DFT. -