பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வாஷிங்டனில் திருமணம் | 'இதோ, இம்மீடியட்டா நான் போய்ப் பார்த்துட்டு வந்து சொல்றேன் மேடம்' என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டான் பஞ்சு. பஞ்சுவைக் கண்டதும் பிள்ளைக்கு மாமா ஒரேயடியாய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டார். "ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க? என்ன நடந்துவிட்டது இப்போது?’ என்றான் பஞ்சு. 'இன்னும் என்ன நடக்கணும்? செய்வதையெல்லாம் செய்துவிட்டு, என்ன நடந்துவிட்டது என்று வேறு கேட்கிறீர்களா?' என இரைந்தார் மாமா. சாமாவய்யர் உமக்குச் சரியாகக் கத்துவதற்கு எனக்குத் தொண்டை இல்லை. விஷயத்தைச் சொல்லாமல் கத்தினால் எப்படி?" என்றான் பஞ்சு. 'ஒகோ! நான் கத்துகிறேனா? அவ்வளவு தூரத்துக்கு வந்துவிட்டதா விஷயம்? இன்னும் கொஞ்ச நேரம் போனால் குரைக்கிறேன் என்று கூடச் சொல்வீர் ஆகட்டும், ஆகட்டும்; இன்றைக்குப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறி விடுகிறதா என்று பார்த்துவிடுகிறேன்' என்று கறுவினார் பிள்ளைக்கு மாமா. இந்தச் சமயத்தில் அய்யாசாமி அய்யரே அங்கு வந்து சேர்ந்தார். அவர் பிள்ளையின் மாமாவைப் பார்த்து, "ஒய்! என்ன சொன்னீர்? என் பெண் கல்யாணம் நின்றுவிடும் என்றா சொன்னீர்? பார்த்து விடலாமே அதையும்தான். என்னய்யா செய்து விடுவீர்! நானும் ராத்திரியிலிருந்து உம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வேண்டுமென்றே வலுச் ஐ. சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக் இ கிறீரே என்றர். - R இதற்குள் அவ்விரண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்வதை வேடிக்கை