பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 145 'கோபத்துக்கு அது மட்டும் காரணமில்லே! நேற்று ஜானவாசத்தின்போது மாப்பிள்ளையின் மாமாவை நீங்க யாருமே கவனிக்கவில்லையாம். அவர் ஒரு கார் கேட்டிருந் தாராம். அதுவும் கொடுக்கவில்லையாம். அதனால் அவர் ரொம்பக் கோபமா இருக்கிறார்!" என்றார் அய்யாசாமி. "அதோ காட்டன் ஸ்ார் வராரே!' என்று கூறினார் அம்மாஞ்சி. 'மெட்ராஸிலிருந்து பாப்ஜியும் வந்தாச்சு மேடம்' எனக் கூறிக்கொண்டே வந்த பஞ்சு தன் நண்பனை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்தச் சீமாட்டி மகிழ்ச்சியோடு பாப்ஜியின் கையைக் குலுக்கி, "பாப்ஜி ஐ ஆம் வெரி ஹாப்பி டு மீட் யூ யு ஹாவ் கம் ஜஸ்ட் இன் டைம் வெரி வெரி சந்தோஷம்! சங்கீத கோஷ்டியினர் எப்போது வருகிறார்கள்?’ என்று விசாரித்தாள். - 'பத்து மணிக்கு' என்றான் பாப்ஜி. - "சரி; முதலில் இட்லி காப்பி சாப்பிட்டு விட்டு வா. மறுபடியும் ஏர்போர்ட் போகணும்' என்றான் பஞ்சு. 'பஞ்ச் உனக்கு ஏன் இப்படி தொண்டை கட்டிப் போச்சு? பாவம், சரியாகவே பேச முடியவில்லையே உன்னால்!” என்று வருத்தப்பட்டாள் மிஸஸ் ராக். “ஒரு மாசமாய்க் கொஞ்சமான அலைச்சலா? கத்திக் கத்திக் குரலே வரவில்லை அவருக்கு' என்றார் அம்மாஞ்சி. 'ஸ் டார்ஸ்ை யெல்லாம் மேப்ளவர் ஒட்டல்லே இறக்கிட்டேன், மேடம்' என்றான் பஞ்சு. 'வெரி குட்! இப்ப சம்பந்திச் சண்டை எந்தப் பொஸிஷன்லே இருக்குதுன்னு எனக்குச் சொல்ல முடியுமா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். |0.