பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வாஷிங்டனில் திருமணம் “...ஹ்ம்... மர்லின் மன்ரோவைத்தான் நேரில் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆம்பிஷன். கொடுத்து வைக்கவில்லை' என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் அம்மாஞ்சி. 'அதோ யார் வரா பாருங்கோ' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள் சிரித்துக் கொண்டே. 'அடேடே ராக்ஃபெல்லர் மாமி’ என்று அதிசயப் பட்டார் அம்மாஞ்சி. ஸ்பெஷலாக வரவழைத்திருந்த சரிகை போட்ட பனாரஸ் பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுடன் வந்து கொண்டிருந்தாள் அந்தச் சீமாட்டி. 'பேஷ் பேஷ்! உங்களுக்கு இந்த ரோஸ் கலர் புடவை பிரமாதமாயிருக்கு' என்றார் அம்மாஞ்சி. 'மகாலட்சுமி மாதிரி இருக்கு' என்றார் சாஸ்திரிகள். "அது யார் மகாலட்சுமி ராக் மாமி கேட்டாள். 'அந்த அம்மாள் வைகுண்டத்திலே இருக்கிறார். உங்க மாதிரி பெரிய கோடீசுவரி!' என்றார் அம்மாஞ்சி. 'லாஸ்ட்ரீஸெல்லாம் இட்லி சாப்பிட்டாச்சா? இட்லியும் கோகனட் சட்னியும் நல்ல காம்பினேஷன். நான்கூட நாலு இட்லி சாப்பிட்டேன்' என்றாள் மிஸஸ் ராக். - 'எங்களுக்கென்ன அவசரம்? முதல்லே சம்பந்திகளை கவனிக்கச் சொல்லுங்க! பிள்ளைக்கு மாமா ரொம்பக் கோபமாக இருக்கிறாராம். சம்பந்தி வீட்டார் யாருமே சாப்பிடவில்லையாம்!” என்றார் அம்மாஞ்சி. 'என்ன கோபம்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'சம்பந்திகளுக்கு பவுடர் பால் காப்பி அனுப்பி விட்டார்களாம். அதான் கோபம்!" என்றார் அம்மாஞ்சி.