பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வாஷிங்டனில் திருமணம் I "மிஸ்டர் பஞ்ச் நாரிக்ரூவாஸெல்லாம் சாப்பிட்டாச்சா, முதல்லே அவங்களைச் சாப்பிடச் சொல்லு!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மிஸ்ஸ் ராக், 'அவர்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருத்தரைக் கூடக் காணவில்லை' என்றான் பஞ்சு. 'அவர்கள் வாஷிங்டன் வீதிகளிலே ஊசி விற்றுக் கொண்டிருக்கிறார்களாம்" என்றார் அம்மாஞ்சி. சம்மர் ஹவுஸிலும் , டம்பர்ட்டன் ஒக்ஸிலும் சாப்பாட்டுப் பந்திகள் நடந்தது நடந்தபடியே இருந்தன. பஞ்சு மிகவும் களைத்துப் போயிருந்தான். "பஞ்சு அண்ணா நீங்க சாப்பிடவே இல்லையே! இலை போடட்டுமா?' என்று விசாரித்தார் ஹெட் குக் வைத்தா. "எனக்கு ஒன்றுமே வேண்டாம். ஒரு டம்ளர் மோர் மட்டும் கொடு; அது போதும். எங்காவது ஒரு துண்டைக் கீழே போட்டு முடங்கிப் படுத்துக் கொண்டால் தேவலை போலிருக்கிறது' என்றான் பஞ்சு. "பஸ்ட் க்ளாஸ் பன்னீர் ரசம் அண்ணா இன்றைக்கு ரசம் மட்டும் கொஞ்சம் சாப்பிடுங்கோ. அப்புறம் பாதம் கீர் தருகிறேன்' என்றான் வைத்தா. 'சரி, ரசம் மட்டும் கொண்டு வா' என்றான் பஞ்சு.