பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதிக கோஷ்டியினர் ராக் க்ரீக் பார்க்கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், 'என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய கட்டடங்களாகத்தான் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன பிரயோசனம்? எந்த வீட்டிலாவது ஒரு திண்ணை உண்டா, சாப்பிட்டதும் படுப்பதற்கு?' என்று குறைப்பட்டார். 'ஒய் ! 'ராக் க்ரீக் பார்க் கிலே வந்து பாரும். குளுகுளுவென்று காற்று வீசும். எங்கே பார்த்தாலும் பெஞ்சுகள் போட்டிருக்கும்' என்று கூறினார் சாம்பசிவ சாஸ்திரிகள். அவ்வளவு பேரும் ஆங்காங்கே மரத்தடிகளில் கும்பல் - கும்பலாக உட்கார்ந்து, கல்யாண விமரிசைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட்டனர். . 'அடாடா மிஸ்ஸ் ராக்ஃபெல்லருக்குத்தான் என்ன மனசு என்ன மனசு!" என்று புகழ்ந்தார் ஒருவர். - 'பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் தனித்தனியாக இரண்டு கார் ப்ரஸண்ட் பண்ணியிருக்காளாமே!" என்றார் இன்னொருவர்.