பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 163 'ஸைலன்ஸ்!' என்றார் அம்மாஞ்சி வாத்தியார். 'நலங்கிட ராரா... ராஜகோபாலா... ' என்று ருக்கு பாடியபோது அத்தனை பேரும் உற்சாகத்துடன் பலமாகச் சிரித்தார்கள். அமெரிக்கர்களுக்கு அந்தப் பாட்டின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு சிரித்தார்கள். ‘ராஜகோபாலா’ என்று தன் கணவன் பெயரைச் சொல்லிப் பாடிவிட்ட ருக்மிணிக்கு அப்போதுதான் தன்னுடைய தவறு புரிந்தது. சட்டென்று வெட்கம் சூழ்ந்து கொள்ளவே, நாக்கைக் கடித்துக் கொண்டு மெளனமாகிவிட்டாள். ‘'எதுக்கு எல்லோரும் சிரிக்கிறீங்க?" என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். . 'ருக்கு தன் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லிவிட்டாள்; அதற்குத்தான் சிரிக்கிறோம்!' என்றாள் லோசனா. 'ருக்குவின் ஹஸ் பெண்ட் நேம் அவ்வளவு ஹ்யூமரஸ்ஸா?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'இண்டியன் லேடீஸ் தங்கள் ஹஸ்பெண்ட் பேரைச் சொல்லக் கூடாது' என்றாள் லோசனா. 'சொன்னால் என்ன? ரொம்ப வேடிக்கையாயிருக்குதே, உங்கள் கஸ்ட்டம்ஸ்!” என்றாள் மிஸஸ் ராக். 'ருக்கு பாடேண்டி!... என்ன வெட்கம்?" எனறாள் அத்தை. - " . 'அத்தை, எனக்குப் பாட்டே மறந்து போச்சு!’ என்று கூறி விட்டாள் ருக்கு. - 'நான் பாடுகிறேன்" என்று கூறிவிட் டு லோசனா பாடத் தொடங்கினாள்.