பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வாஷிங்டனில் திருமணம் | காட்சி அளித்தாள். அவளிடமிருந்து காப்பியைக் கையில் வாங்கிக் கொண்ட பஞ்சு தாங்க்ஸ்’ என்றான் சிரித்துக் கொண்டே. 'எல்லோரும் நலங்குக்கு ரெடியாயிட்டாங்க... என்றால் லல்லி. - 'இதோ, ஒன் மினிட்' என்று கூறிவிட்டு எழுந்தான் பஞ்சு. பந்தலில் பெரிய பெரிய பவானி ஜமக்காளங்களை விரித்து, நலங்குக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் பாப்ஜி. புஷ்பங்கள் வந்ததும், டம்பர்ட்டன் ஒக்ஸிலிருந்து மாப்பிள்ளையை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். நலங்கு ஆரம்பமாயிற்று. இதற்குள் பந்தலில் துளி இடமில்லாதபடி, அமெரிக்கப் பெண்மணிகளும், ராக்ஃபெல்லர் உறவினர்களும் கூடிவிட்டார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா மூவரும் பட்டுப் புடவை உடுத்தி, நலங்குப் பாய்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டனர். கூட்டம் நலங்குக் காட்சியைக் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. முதலில் மாப்பிள்ளை ராஜா மணையில் அமர்ந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் மணப்பெண் ருக்மிணி அவன் எதிரில் நாணத்துடன் வந்து நின்றாள். "நாயனக்காரர் ரெடியா?" என்று கேட்டார் அம்மாஞ்சி. நாதஸ்வரக்காரர் பீபீ என்று சீவாளியை எடுத்து ஊதி, தாம் இருப்பதை அறிவித்துக் கொண்டார். - 'ருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடி விட்டு மாப்பிள்ளைக்குச் சந்தனம் பூசு' என்று சொல்லிக் கொடுத்தாள் பெண்ணுக்கு மர்மி. பந்தலில் கேலியும் சிரிப்புமாக அமர்க்களப்பட்டது! - [ಿ ❖ØሥልUሥፇቃNo2ሓ.ሓ.... ?