பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 161 'ஷம்பந்தி வீட்டுக்கு டிபன் காப்பி அனுப்பியாச்சா? ருக்கு! நீ டிரஸ் பண்ணிக்கிட்டயா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மிஸஸ் ராக். "எல்லாம் ஆயிட்டுது மேடம்! பூ வந்ததும் நலங்கு ஆரம்பிக்க வேண்டியதுதான்' என்றாள் பாப்ஜி. 'பாப்ஜி, ஈவினிங் ரிஸெப்ஷன் அரேஞ்ச்மெண் டெல்லாம் எந்த மட்டில் இருக்குது? எத்தனை மணிக்குக் கச்சேரி?" என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'கொஞ்சம் லேட்டாகத்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கும், மேடம்!" 1| 'ஏன்? : 'பால்காட் மணி ஐயர் ப்ளேன்லே வந்ததாலே, ப்ளேன் சத்தம் அவர் காதிலேயே இருக்காம். அதனாலே சுருதி சேர்ப்பதற்குக் கொஞ்சம் சிரமப்படுமாம். கொஞ்ச நேரம் போனால் சரியாகிவிடுமென்று சொல்கிறார் என்றான் பாப்ஜி. 'பரவாயில்லை; கர்னாடிக் மியூஸிக்னா சுருதிதான் ரொம்ப முக்கியம்' என்றாள் மிஸஸ் ராக். 'உங்களுக்கு மியூஸிக் கூட வருமா, மேடம்?" 'ஒ எஸ். பியானோ வாசிக்கறதுதான் எனக்கு பாஸ் டைம்' என்றாள் மிஸஸ் ராக். ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்திக் கிடந்த பஞ்சுவை மெல்லிய கரம் ஒன்று தீண்டி எழுப்பியது. சுய 3 உணர்வு பெற்ற பஞ்சு கண் விழித்துப் பார்த்தபோது, கையில் : காப்பியுடன் நின்று கொண்டிருந்த லல்லி, மோகினி வடிவமாகக்