பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 169 'கல்யாணத்துக்கு வந்து போகிறவர்களுக்கு இப்படி ஒரு அடையாளம் செய்து அனுப்புவது எங்கள் வழக்கம். இவர்கள் துணியில் உள்ள மஞ்சள் கறையைப் பார்க்கிறபோது 'கல்யாணத்துக்குப் போய் வந்தவர்கள் என்று மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்' என்றான் பஞ்சு. - 'இந்தத் துணிகளைப் பார்க்கிறபோது எனக்கு ப்ளீடிங் மெட்ராஸ் ஞாபகம்தான் வருகிறது" என்றாள் மிஸஸ் ராக். அன்று இரவே பாதிப் பேருக்கு மேல் ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டதால், கல்யாண வீடு களையும் கலகலப்பும் இழந்து காணப்பட்டது. 'காலையில் கிரகப்பிரவேசம் ஆனதும், சம்பந்தி வீட்டில் நமக்கெல்லாம் எதிர் விருந்து நடக்கும். அது முடிந்ததும் நாளைக்கு ஈவினிங் டைடல் பேஸினில் பாலிகை விடணும். அப்புறம் நாங்களும் புறப்பட வேண்டியதுதான்' என்றான் பாப்ஜி. ‘'எதிர் விருந்து என்றால் அது என்ன?’ என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். - ஆப் போஸிட் டின்னர் என்று தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அதை மொழி பெயர்த்தார் அம்மாஞ்சி. 'அத்தோடு மேரேஜ் கம்ப்ளீட் ஆயிடுமா? .. 'அப்புறம் சாந்தி கல்யாணம் இருக்கு' என்றார் அம்மாஞ்சி வாத்தியார். — --- 'வாட் வாட் சாந்தியா? அது யார் அது? ருக்கு கல்யாணம் ஒண்ணே போதும். வேறே யார் கல்யாணமும் இப்ப வேண்டாம்!' என்றாள் மிஸஸ் ராக். r