பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வாஷிங்டனில் திருமணம் வேண்டும் என்பதற்காக, தொன்னையில் ஐஸ் க்ரீம் வைத்துக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் பாப்ஜி, மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் சோபாவில் அமர்ந்து கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தனர். பாதிக் கச்சேரியில் அம்மாஞ்சி வாத்தியார் வந்து மணமக்களை அழைத்தார். ‘'எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்றீங்க?' என்று கேட்டாள் மிஸஸ் ராக். 'ப்ரைடும், ப்ரைட்க்ரூமும் அருந்ததி பார்க்கணும்!" என்றார் அம்மாஞ்சி. அருந்ததின்னா?” 'அருந்ததின்னா, அது ஒரு ஸ்டார்!' ஸ் டாரா? ஸ்டார்ஸெல்லாம்தான் 'முகூரட் முடிஞ்சதுமே போயிட்டாங்களே!' என்றாள் மிஸஸ் ராக். ஸினிமா ஸ்டார் இல்லை, மேடம் ஆகாசத்திலே உள்ள அருந்ததி ஸ்டார் என்றார் அம்மாஞ்சி. - 'அப்படியா டெலஸ்கோப் வரவழைக்கட்டுமா?" என்று கேட்டாள் திருமதி ராக். . - 'அதெல்லாம் வேண்டாம்; ஆகாசத்திலே அருந்ததி நட்சத்திரம் இருக்குமிடம் எனக்குத் தெரியும்...' என்றார் அம்மாஞ்சி. - "ஆமாம்; நீங்கதான் ஸயண்டிஸ்ட் அம்மாஞ்சியாச்சே!" என்றாள் மிஸஸ் ராக் சிரித்துக் கொண்டு. கல்யாணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் அன்று மாலையில் மஞ்சள் நீராடி மகிழ்ந்தனர். மஞ்சள் நீரை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டிருந்ததைக் கண்ட மிஸ்ஸ் ராக்ஃபெல்லர், 'ஏன் இப்படி யெல்லோ வாட்டரை வேஸ்ட் பண்றீங்க?" என்று கேட்டாள்.