பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 171 'லார்ஜ்-மெளத் பாஸ்! என்ற இந்த வகை மீன்கள் இங்கே அதிகம்!” என்றாள் மிஸஸ் ராக். பாலிகை விடும் சடங்கு வெகு சீக்கிரமே முடிந்துவிட்டது. ஆனாலும் ஒருவருக்கும் அந்த இடத்தை விட்டுப் போகவே மனம் இல்லை. 'எல்லோரும் இப்படிப் புல் தரையில் சற்று நேரம் உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டிருக்கலாமே!’ என்ற யோசனையை வெளியிட்டாள் மிஸஸ் மூர்த்தி. 'வெரி குட் ஐடியா தோசையும் புளியோதரையும் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதையும் இங்கேயே 'பிக்னிக் மாதிரி சாப்பிட்டுவிட்டுப் போய் விடலாம் : என்றார் அய்யாசாமி. 'எடுங்கள் அதை' என்றார் மாமா. அத்தையும், பாட்டியும் ஆளுக்கு இரண்டு தோசையும், கொஞ்சம் புளியோதரையும் எடுத்து வைத்தார்கள். 'மிளகாய்ப்பொடி இருக்கா?' என்று நாக்கில் ஜலம் ஊறக் கேட்டார் மூர்த்தி. - சாப்பிட்டு முடிந்ததும் சற்று நேரம் எல்லோரும் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். - 'இந்த இடத்தில் உங்களோடு சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டால் எப்போதும் அது ஒரு ஞாபகார்த்தமாயிருக்கும்' என்று தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டார் அய்யாசாமி. r 'ஓ. எஸ் அதுவும் சரியான யோசனைதான். ஜெபர்ஸன் மண்டபப் படிகளில் நின்று எடுத்துக் கொள்ளலாமே!' என்றாள் மிஸஸ் ராக். - லோரிட்டாவும், வசந்தாவும் சற்று தூரத்தில் செர்ரி மரங்களைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.