பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி - 175 "பஞ்சுவுக்கு என்ன கொடுக்கப் போlங்க?" என்று கேட்டார் அய்யாசாமி. "பஞ்ச்சுக்கு நான் ஒண்ணும் கொடுக்கப் போறதில்லே. தாங்க்ஸ் கூடச் சொல்லப் போறதில்லை' என்று கூறியபோது உணர்ச்சிப் பெருக்கில் அந்தச் சீமாட்டியின் குரல் கரகரத்தது. - 'லல்லி! உனக்கும் நான் ஏதும் கொடுக்கப் போவதில்லை' என்று கூறிய மிஸஸ் ராக், 'பஞ்ச் இந்தா இவளை உனக்குப் பரிசாகவும், லல்லிக்கு உன்னைப் பரிசாகவும் கொடுக்கப் போகிறேன். உங்கள் இருவருக்கும் அடுத்த, மே மாதம் பால்காட்டில் திருமணம் நடக்கும். நானே நேரில் வந்து அதை நடத்தி வைக்கப் போகிறேன்" என்று இருவர் கைகளையும் சேர்த்து வைத்தாள். 1ெ1ஷிங்டன் விமான கூடம். மணப்பெண் ருக்கு, மணமகன் ராஜா, பஞ்சு, லல்லி, பாப்ஜி, அப்யாசாமி ஐயர், அம்மாஞ்சி, சாஸ்திரிகள், மாமா, பாட்டி, அத்தை எல்லோரும் மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் வந்து ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டிருந்தனர். மிஸஸ் ராக்ஃபெல்லர் பொங்கி வந்த கண்ணிரைத்துடைத்துக் கொண்டே, 'உங்களை யெல்லாம் விட்டுப் பிரியவே மனமில்லை. நீங்க எல்லோருமே என்னிடம் ரொம்ப அன்போடு பழகிக் கொண்டிருந்தீர்கள். உங்களையெல்லாம் மறுபடியும் எப்போது பார்க்கப் போகிறேனோ? என்றாள். 'அதற்கென்ன? சீக்கிரமே ரிஷிபஞ்சமி விரதம் எடுத்துக் காள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் வந்து நடத்தி வைக்கிறோம்" என்றார் அம்மாஞ்சி. - அத்தையும், பாட்டியும் கட்டுச் சாத மூட்டையுடன் விமானத்தை நோக்கி நடந்தனர். -