பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வாஷிங்டனில் திருமணம் கெளரவமா வைத்துக்கொள்ள வேண்டியது ரொம்ப இம்பார்ட்டெண்ட்” என்றாள் மிஸஸ் ராக். "ஆகா! சத்தியமான வார்த்தை' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். 'அம்மாஞ்சி வாட்யார், ஸாம்ஸன் ஸாஸ்ட்ரி, அப்பு லாஸ்ட்ரி மூன்று பேருக்கும் ஈச் தெளஸண்ட் டாலர்ஸ், ஒன் ரிஸ்ட் வாட்ச், அண்ட் ஒன் ஸ்கூட்டர்' என்றாள் மிஸஸ் ராக். சந்தோஷ மிகுதியால் அம் மூவருக்கும் சற்று நேரம் பேச்சே கிளம்பவில்லை. "அங்க்கிள் ஸாமைக் கூப்பிடுங்கள்' என்றாள் மிஸஸ் ராக். அவர் வந்ததும், 'உங்களுக்கு ஒரு கார் ப்ரஸண்ட் பண்ணியிருக்கேன்' என்றாள் மிஸஸ் ராக். 'எனக்கா? எனக் கெதற்கு கார்?' என்று கேட்டார் பிள்ளைக்கு மாமா. 'நீங்க மனசு வைக்கலேன்னா ஷம்பந்தி ஷண்டையே நடந்திருக்காதே! ஷம்பந்தி ஷண்டை நடக்கல்லேன்னா நானும் என் ப்ரண்ட்ஸும் ரொம்ப ஏமாந்து போயிருப்போமே" என்று கூறி, மாமாவின் கையைக் குலுக்கினாள் மிஸஸ் ராக். அடுத்தாற்போல் பாப்ஜியை அழைத்து, வைர மோதிரம் ஒன்றும் ரிஸ்ட் வாட்ச், ஒன்றும் அவனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு, "பாப்ஜி, உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கடைசி நேரத்தில் நீ டாக்ஸ் அனுப்பலேன்னா ஜான்வாசமே 'டல் லாப் போயிருக்கும்' என்று அவன் முதுகில் ஒரு ஷொட்டு' கொடுத்தாள்.