பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 173 மிஸ்ஸ் ராக், குரூப் போட்டோ எடுத்து முடிந்ததும் எல்லோரும் காரில் ஏறி சம்மர் ஹவுஸை அடைந்தனர். 'சம்பந்தி வீட்டார், பெண் வீட்டார் இவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் இன்று இரவே புறப்பட்டுப் போகிறார்களாம்" என்றான். பஞ்சு. 'ஸாஸ்ட்ரீஸெல்லாம் கூடவா?' என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக். "ஆமாம். அவர்களும் கூடத்தான்' என்றான் பஞ்சு. 'அம்மாஞ்சி, அப்பு ஸாஸ்ட்ரி, ஸாம்ஸன் ஸ்ாஸ்ட்ரி இவங்க மூணு பேரும் மட்டும் நாளைக்குப் போகட்டும்! ஆயிரம் லாஸ்ட்ரீஸ்லே யாராவது ஒருத்தர் இந்த ஜார்ஜ் டவுனிலேயே பர்மனெண்ட்டாக இருந்து பிள்ளையார் கோயில் பூஜையைக் கவனித்துக் கொள்ளட்டும்' என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். - 'சரி மேடம். நான் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிடுகிறேன்' என்றான் பஞ்சு. “ஸாஸ்ட்ரீஸுக்கெல்லாம் ஈச் டு ஹண்ட்ரட் டாலர்ஸ் கொடுத்துடுவோம். அதைத் தவிர ஆளுக்கு ஒரு வாட்ச். போதுமா?" என்றாள் மிஸஸ் ராக். - “எதேஷ்டம்னா இந்த மாதிரி மனசு யாருக்கு வரும்!" என்றார் அம்மாஞ்சி. - - 'இண்டியாவின் வேதிக் கல்ச்சரை ஸாஸ்ட்ரீஸுங்க தான் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. தே ஆர் ப்ரம் தி லாண்ட் ஆப் சங்கராச்சார்யா அவங்களையெல்லாம் நல்லபடியா