பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வாஷிங்டனில் திருமணம் - | 'கமர்கட் என்ன? நல்ல கமறாத கட்டாகவே வாங்கித் தருகிறேன்' என்றாள் வசந்தா. லோரிட்டாவுக்குத் தோழி என்று சொல்லத் தெரியவில்லை. 'ழி என்ற எழுத்தை அவளால் உச்சரிக்க முடியவில்லையாகையால், தோளி தோளி என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். ஒருநாள் முழுவதும் வசந்தா லோரிட்டாவின் வீட்டில் தங்கி, ‘ழ ழா ழி ழி கற்றுக் கொடுத்தும், அவளுக்குத் தோழி என்று சொல்லத் தெரியாமல் போகவே, 'எனக்கு நீ தோளியாகவே இருந்துவிடு - பரவாயில்லை. எனக்கு 'வி சொல்ல வரும். ஆகையால் நான் உன்னைத் தோளி என்றே கூப்பிடுகிறேன்: எனறாள. - 'டாஞ்சூரில் போர் அடித்தால் என்ன செய்கிறது வஸ்ண்டா? என்று கேட்டாள் லோரிட்டா. "நாம் இருவரும் சோழி வைத்துக் கொண்டு பல்லாங்குழி ஆடலாம்' என்றாள் வசந்தா. “ஒ, சோளி,... பல்லாங்குளி எனக்கு அது வராது." 'சரி சரி; 'ழ' வராத விளையாட்டாகப் பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன், கவலைப்படாதே!' என்றாள் வசந்தா. - டி.கே.மூர்த்தி, அவர் மனைவி லோசனா, மகள் வசந்தா மூவரும் அடுத்த வாரமே இந்தியாவுக்குப் புறப்பட்டு விட்டார்கள். ஹாரிஹாப்ஸ், கேதரின், லோரிட்டா மூவரும் நியூயார்க் விமான கூடத்துக்கு வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். - அப்புறம் பத்து நாட்கள் கழித்து, ஹாப்ஸ் தம்பதியரும் அவர் மகளும் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.