பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 17 டாஞ்சூரில் நாலுநாள் கல்யாணம் தடபுடல் பட்டது. ஹாப்ஸ் குடும் பத்தாருக்குத் தனி ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாலு நாளும் கேதரின் கவுன் அணியவில்லை. பதினெட்டு முழம் பட்டுப்புடவைதான். லோரிட்டா வுக்குப் பாவாடை தாவணிதான். ஹாப்ஸ்-க்கு வேஷ்டி அங்கவஸ்திரம் தான். நீளமான அந்தப் பட்டுப் புடவையைக் கேதரினுக்குக் கொசுவம் வைத்துக் கட்டி விடுவதற்குள் வசந்தாவின் அத்தைக்குப் பெரும்பாடாகிவிட்டது. அதைக் கட்டிக் கொண்ட கேதரின் நடக்கத் தெரியாமல் தடுக்கித் தடுக்கி விழவே, 'iல் சேர் வரவழைத்து, போலியோ பேஷண்ட்” போல் அதில் உட்கார்ந்தபடியே அங்கங்கு போய்க் கொண்டிருந்தாள். எல்லாப் பெண்களும் அவளை 'கேதரின் மாமி, காப்பி சாப்பிட்டீர்களா? நியூயார்க் மாமி, மஞ்சள் பூசிக் குளித்தீர்களா?' என்று ஓயாமல் விசாரித்தபடியே இருந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை யின்போது, எல்லாப் பெண்டுகளோடும் சேர்ந்து அந்த நியூயார்க் மாமியையும் உட்கார வைக்காத குறைதான்! ஹாரி ஹாப்ஸ் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு, கல்யாணச் சடங்குகளிலேயே கண்ணும் கருத்துமாயிருந்து படம் எடுப்பதும், குறிப்புகள் எழுதிக் கொள்வதுமாயிருந்தார். நாதசுர வாத்தியம், தவில், ஜால்ரா, தென்னங் கீற்றுப் பந்தல், ஒமப் புகை, வாழை மரம், தாலிச் சரடு, அம்மிக்கல், அருந்ததி, மருதாணி, கண் மை, இத்தனையும் பற்றிக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார். சில মন্ম சமயம் அவர் குறிப்பெழுதிக் கொண்டே . . . . in ஒவ்வொரு இடமாகப் போகிறபோது, அவர் கட்டியிருந்த பஞ்ச கச்சம் வேஷ்டி பின்பக்கமாக அவிழ்ந்து, தரையெல்லாம் இ பெருக்கிக் கொண்டே போகும். வேஷ்டி ) அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் அவர்