பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாஷிங்டனில் திருமணம் பாட்டுக்கு ஒடிக் கொண்டேயிருப்பார். அடிக்கடி அவிழ்ந்து போகும் பஞ்ச கச்சத்தை எடுத்துச் செருகிவிடுவது சாத்தியமில்லாமல் போகவே, அவர் போகிற இடத்துக் கெல்லாம் அவர் பஞ்ச கச்சத்தைப் பின்னாலேயே துக்கிப் பிடித்துக் கொண்டு செல்லத் தனியாகவே பேஜ் பாய் (உடை தாங்கி) ஒருவனை நியமித்து விட்டார்கள்! 'வாழை மரம் என்பது டாஞ் சூரில் நிறையப் பயிராகிறது. அதனால் அவற்றை வெட்டி வந்து பந்தல் முழுவதும் கட்டிவிடுகிறார்கள். வாழை இலைகளைச் சாப்பிடுவதற்கு உபயோகிக்கிறார்கள். காய்களை வெட்டிச் சமைத்துவிடுகிறார்கள். வாழைப் பட்டைகளில் இருந்து நார் என்னும் ஒருவகை த்ரெட் தயாரித்து அதில் பூத்தொடுக்கிறார்கள். வாழைக்கும் பூ உண்டு. ஆனால், அந்தப் பூவைத் தலையில் சூடிக் கொள்வதில்லை. கல்யாணத்துக்கு முதல் நாள் ஜான் வாசம் ' என்ற பெயரில் ஒரு 'ப்ரொளெபஷன் நடக்கிறது. அப்போது 'பிரைட்க் ரூம் ஸ்விட் அணிந்து கொள்கிறார். இந்த 'ஃபங்ஷ னின்போது மாப்பிள்ளை ஆங்கில முறையில் டிரஸ் செய்து கொள்வதால் ஒருவேளை இதை ஜான் வாசம்’ என்று ஆங்கிலப் பெயரிலேயே குறிப்பிடுகிறார் களோ, என்னவோ? ஜான் வாசம் என்பது பிள்ளையை மட்டும் காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு பங்ஷன். பந்துக்களும், நண்பர்களும் காரைச் சூழ்ந்து கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்கள். எல்லோருக்கும் * முன்னால் நாதசுரக்காரர்கள் போகி றார்கள். தவில் என்பது டபிள் ஹெடட் இன்ஸ்ட்ருமெண்ட்'. இதை வாசிப்ப தி வருக்குக் குடுமி உண்டு. இவர் ஒரு பக்கத்தை ஸ்டிக் கால் 'பீட் செய்து