பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பிள்ளைக்கு ஒரு கார். பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம் ' என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள். - "பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார் களாமா?’ என்று விசாரித்தாள் அபயாம்பாள் அத்தை. 'இருபத்திரண்டு கேரட் தங்கமாகவே நமக்கு வேண்டியதைக் கொடுத்துவிடுகிறார்களாம். இஷடமான நகைகளைச் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு கண்டிஷன்! எல்லா நகைகளையும் அமெரிக்கா விலேயேதான் செய்ய வேண்டுமாம். நகை செய்வதை ராக்ஃபெல்லர் மாமி நேரில் பார்க்க வேண்டுமாம் என்று பெண்ணுக்குத் தகப்பனார் அய்யாசாமி கூறினார். 'இதென்னடா சங்கடம்? நகைகளை நம் ஊரிலேயே செய்து எடுத்துக் கொண்டு போனால் என்னவாம்?' என்று கேட்டாள் பாட்டி. - 'அவர்கள் இவ்வளவு பணம் செலவழித்து இந்தக் கல்யாணத்தை நடத்துவதே நம்மவர்களின் கல்யாணத்தில் உள்ள வேடிக்கையெல்லாம் பார்க்கத்தானே? நமக்கு ஒரு