பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 25 கவலையும் இல்லை. சம்பந்தி வீட்டுக்காரர்களைப் போல் 'ஜாம் ஜாம் என்று அமெரிக்கா போய் விட்டு வரவேண்டியதுதான்' என்றார் அய்யாசாமி! 'பேஷ்! நம்ம ருக்குவின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! அவள் கழுத்தில் மூன்று முடிச்சு விழப் போகிறதா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அவளுக்கானால் அதிர்ஷ்டம் இப்படி அடித்திருக்கிறது!’ என்று சொல்லி மகிழ்ந்தாள் பாட்டி. "பிள்ளையைப் பார்த்தாயாடா? கண்ணுக்கு லட்சணமா யிருக்கிறானா? - ருக்குவின் அத்தை கேட்டாள். 'அதற்காகத்தானே டெல்லிக்குப் போய் வந்தேன். ராஜா மாதிரி இருக்கிறான். பெயரும் ராஜாதான். டெல்லி செக்ரடேரியட்டில்தான் வேலை. எண்ணுாறு ரூபாய் சம்பளம். கும்பகோணம் மூர்த்தியின் மாப்பிள்ளைக்குச் சிநேகிதனாம். அமெரிக்காவிலுள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்திருக் கின்றன என்றார் அய்யாசாமி. 'ஒகோ! அப்படியா சங்கதி கல்யாணத்தை அமெரிக்காவிலே நடத்தணும் என்கிறார்களே, அதை எண்ணுகிறபோதுதான் கொஞ்சம்...' என்று இழுத்தார் பெண்ணுக்கு மாமா. - 'அதனால் என்ன? ராக்ஃபெல்லர் சம்சாரம் இந்த விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருக்கிறாள்ாம். அவளுடைய நாத்தனார் கும்பகோணம் மூர்த்தியின் மகளுக்கு நடந்த கல்யாணத்தைப் பார்த்துவிட்டுப் போய், மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கதை கதையாக அளந்து விட்டிருக்கிறாள். அதைக் கேட்டுவிட்டு ராக்ஃபெல்லர் சீமாட்டி, 'அந்த மாதிரி கல்யாணம் ஒன்றை உடனே அமெரிக்காவில் நடத்திப் பார்க்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி என்று ஒரு காலில்