பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாஷிங்டனில் திருமணம் நிற்கிறாளாம். அதை முன்னிட்டுத்தான் இவ்வளவு ஏற்பாடும்' என்றார் அய்யாசாமி. 'அமெரிக்காவிலே போய்க் கல்யாணம் செய் வ தென்றால், இங்கிருந்து நாம் அத்தனை பேரும் போயாக வேண்டுமே சம்பந்தி வீட்டுக்காரர்கள் எங்கே தங்குவது? நாமெல்லாம் எங்கே தங்குவது?' என்று அடுக்கினாள் அத்தை. - 'அதிருக்கட்டும்; அப்பளம் எங்கே இடுவது?" என்று கவலைப்பட்டாள் பாட்டி. - 'அதுவும் அமெரிக்காவிலேதான் இடணுமாம். ஒரு லட்சம் அப்பளம் இட்டாகணும். கைமுறுக்கு ஐம்பதாயிரம். பருப்புத் தேங்காய் பத்தாயிரம்...' என்றார் அய்யாசாமி. ...TamilBOT (பேச்சு) 'அம்மாடி! இவ்வளவுக்கும் இடம் ஏது? யார் செய்யப் போகிறா?' 'அப்பளம் இடுவதற்கென்று அமெரிக்காவிலே ஒரு பெரிய கட்டடத்தையே காலி செய்து கொடுத்து விடப் போகிறார்களாம். அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியிலே எத்தனை லட்சம் அப்பளம் வேண்டுமானாலும் உலர்த்திக் கொள்ளலாமாம். நூறு பாட்டிமார்களும் நூறு சமையல்காரர்களும் முன்னாடியே புறப்பட்டுப் போக வேண்டியிருக்கும். அப்பளம் இடுவதையும், ஜாங்கிரி சுற்றுவதையும் அமெரிக்கா பூராவும் டெலிவிஷன் மூலமாகக் காட்டப் போகிறார்களாம். அது மட்டுமில்லை. - கல்யாணக் காட்சிகள் முழுவதுமே டெலிவிஷனில் காட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.' என்றார் அய்யாசாமி. 'கும்பகோணம் கொடிக்கால் வெற்றிலை, பந்தக்கால், தென்னங்