பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 27 கீற்று, வாழை மரம், நுகத்தடி, அம்மிக்கல், ஆட்டுக்கல் இவ்வளவும் போயாக வேண்டுமே" என்றார் பெண்ணின் f i)fTLD fT. - "அதைப்பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை அடுத்த வாரத்திலிருந்து தினமும் ஒரு ஸ்பெஷல் ப்ளேன் மெட்ராஸுக்கும் அமெரிக்காவுக்கும் பறந்தபடியே இருக்கும். அதில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம். எத்தனை சாமானை வேண்டுமானாலும் ஏற்றி அனுப்பலாம்' என்றார் அய்யாசாமி. 'சரி - அடுத்தாற்போல் நாமெல்லாம் என்ன செய்யனும் இப்போ? அதைச் சொல்லு...' என்றார் மாமா. 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் ப்ளேன்லே அமெரிக்காவுக்குப் புறப்படனும். டில்லியிலேருந்து பிள்ளைக்கு மாமாவும், மாமியும் வருகிறார்கள். அவர்களும் நம் மோடு பம்பாயில் சேர்ந்து கொள்வார்கள்...” - * "நாம் என்றால் யார் யார்?' என்று கேட்டார் மாமா. 'அம் மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள், பனாரஸ் பாட்டி, (காசிக்கு மூன்று முறை போய் வந்ததால் ஏற்பட்ட காரணப்பெயர்) பெண்ணுக்கு அத்தை, அம்மா, அப்பா எல்லாரும்தான். டில்லியிலுள்ள என் மருமான் பஞ்சுவும் வருகிறான். அவன்தான் நமக்கெல்லாம் லீடர். ஏற்கெனவே அவன் இரண்டு முறை அமெரிக்கா போய் வந்திருக்கிறான். இங்கிலீஷ் ரொம்ப நன்றாகப் பேசுவான். நாம் எல்லோரும் நியூயார்க், స్సా வாஷிங்டன் இரண்டு நகரங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கல்யாணத்துக்கு ஏற்ற இடம் எது என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான்' என்றார் அய்யாசாமி.