பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வாஷிங்டனில் திருமணம் 'அம்மாஞ்சி வாத்தியார் எதுக்குடா? அது ரெண்டு அசட்டுப் பிசட்டுன்னு உளறிக் கொண்டிருக்குமே... என்றார் மாமா. 'அதெல்லாம்தான் தமாஷ்! அம்மாஞ்சி முக்கியமா வரட்டும். சாம்பசிவ சாஸ்திரிகளும் அம்மாஞ்சியும் ரொம்ப சிநேகம். இரண்டு பேரும் லெளகிகம் தெரிந்தவர்கள். சைக்கிள் விடத் தெரிந்தவர்கள். அம்ம்ாஞ்சி வாத்தியாருக்கு இங்கிலீஷ் சினிமான்னா ரொம்பப் பைத்தியம். இங்கிலீஷ்கூடச் சுமாராகப் பேசுவார். அதோ அவர்கள் இரண்டு பேருமே வருகிறார்கள். வாங்கோ அம்மாஞ்சி வாங்கோ சாஸ்திரிகளே! இப்பத்தான் உங்க இரண்டு பேரையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்' என்றார் அய்யாசாமி. - "எங்களைப் பற்றியா? என்ன விசேஷமோ?' என்று கேட்டார் அம்மாஞ்சி. "நீங்க இரண்டு பேரும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படறதுக்கு ரெடியா இருக்க ணும்.' . "அமெரிக்காவுக்கா நாங்களா? என்ன இப்படி திடீர்னு ஹைட்ரஜன் குண்டைத் துக்கிப் போடு கிறீர்கள்?" அம்மாஞ்சி வாத்தியார் கேட்டார். "நிஜமாத்தான் சொல்றேன். என் பெண் ருக்மிணியின் கல்யாணம் அமெரிக்காவிலே நடக்கப்போகிறது." "அதென்ன அப்படி? - - 'அம்மாஞ்சி உமக்கு ராக்ஃபெல்லரைத் தெரியுமோ?" 'எனக்கு அவரைத் தெரியும். அவருக்கு என்னைத் தெரியாது.