பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 29 ஒருமுறை அவரை மீட்' பண்ணி ஒரு “எய்டு’ கேட்கணும்னு ஆசை...' 'மிஸ்ஸ் ராக்ஃபெல்லரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீரா?” “சரியாப் போச்சு. கோடீசுவரப் பிரபுவின் சம்சாரமாச்சே! அரசப்ரதட்சணத்துக்கு ஒரு தடவை 108 - டிலோட்டோ கார் வாங்கிக் கொடுத்தாளாம். அது மட்டுமா? ஒரு லட்சம் டாலர் செலவழிச்சு ரிஷிபஞ்சமி விரதம் எடுத்துக் கொள்ளப் போவதாகக் கேள்வி. தங்கத்தாலே கோதுமை பண்ணி வைதிகப் பிராமணர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார்களாம். ' 'பேஷ் இந்த நியூஸெல்லாம் உமக்கு யாரய்யா சொன்னது... ?” 'இதெல்லாம் ஒருத்தர் சொல்லணுமா என்ன? ஒரு யூகம்தான். நாம் சொன்னா நியூயார்க் டைம்ஸிலே போடறான்' - “என் பெண் கல்யாணத்தைக்கூட அந்த அம்மாள்தான் செய்து வைக்கப் போகிறாள். நீங்க இரண்டு பேரும் என்னுடன் புறப்படனும்...' - 'தயாராகக் காத்துண்டிருக்கோம். ராக்ஃபெல்லர் சம்சாரம் நடத்தற கல்யாணம்னா சாமான்யமா கொடுத்து வைக்கனுமே. பூரி தட்சணையை டாலர் டாலரா அள்ளி வீச மாட்டாளோ? ' வைதிகப் பிராமணர்கள் வெளி நாட்டுக்குப் போவதென்றால் யோசிப்பார்களே... உங்களுக்கு அதெல்லாம்...' என்று இழுத்தார் அய்யாசாமி. 'அந்தக் காலத்திலே பரம வைதிகரான மாளவியாஜியே லண்டனுக்குப் போய் வந்தாரே... அவரைவிடவா நாமெல்லாம் ஒசத்தி?'