பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாஷிங்டனில் திருமணம் | 'இங்கிலீஷ் பாஷை தெரியாதே உங்களுக்கு - அமெரிக்காவிலே கஷ்டப்பட மாட்டீர்களா?” 'பாஷை தெரியல்லேன்னா நமக்கென்ன கஷ்டம்? நாம் பேசற பாஷை அமெரிக்காளுக்குப் புரியாது. அதனாலே, கஷ்டப்படப் போறவா அவாதானே?" 'சரி, வாத்தியாரே! அப்படின்னா பிரயாணத்துக்கு ரெடியா இருங்க...' 'ஸ்ண்டே மார்னிங் வெபவன் தர்ட்டிக்கா ப்ளேன்: ' அம்மாஞ்சி கேட்டார். 'அமெரிக்கா என்றதுமே இங்கிலீஷ் பிரவாகமா வரதே' என்றார் அய்யாசாமி. - "புல் ஸ்விட்டே தைத்துப் போட்டுக் கொண்டு வரப் போகிறேனே...!" என்றார் அம்மாஞ்சி. 'கே| சே! அப்படியெல்லாம் வேஷத்தை மாற்றிவிடாதீங்க. யார் யார் எப்படி இருக்கிறோமோ, அப்படியேதான் போகணும்.நம்மையெல்லாம் நம் நாட்டு உடையிலே பார்க்கத்தானே ஆசைப்படுவா?” 'சாஸ்திரிகள்னா பேர் பாடியாவா போறது? அட்லீஸ்ட் லால் பகதூர் சாஸ்திரியாட்டம் ஒரு ஷெர்வானியாவது தைத்துப் போட்டுக் கொள்கிறேனே...?" "சொல்றதைக் கேளும். நீர் இப்போது இருக்கிறபடியேதான் வரணும்... தெரிந்ததா?... போய் வாரும்.' பெண் விட்டுக்காரர்கள் (ருக்குவின் தம்பி வெங்கிட்டு உள்பட), பிள்ளை வீட்டுக்காரர்கள், டில்லி பஞ்சு எல்லோரும் பம்பாய் விமான நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடிவிட்டார்கள்.