பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 33 டில்லி பஞ்சு எல்லோரையும் விமானத்தில் ஏற்றிவிட்டுத் தானும் ஒரு nட்டில் அமர்ந்து கொண்டான். அம் மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள் இருவரும் விமான பெல்ட்டை இறுக்கிப் போட்டுக் கொண்டு கண்ணாடிப் பலகணி வழியாகக் கீழே பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பனாரஸ் பாட்டி ஜப மாலையை எடுத்து உருட்டினாள். விமானம் உயரத்தில் கிளம்பியது. ஏர்ஹோஸ்ட்டஸ் வந்து எல்லோருக்கும் பெப்பர் மிண்ட் டும் லவங்கமும் வழங்கினாள். வெங் கிட்டுவுக்கு ஆகாசப் பிரயாணம் ஒரே இனிப்பாயிருந்தது! அந்த ஆரணங்கையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாஞ்சி அப்ஸ்ரஸ் மாதிரி இருக்காளே?’ என்றார். "ஆகாசத்திலே பறக்கிறவர்கள் கந்தர்வப் பெண்கள் மாதிரி இருப்பது சகஜம்தானே?' என்றார் சாஸ்திரிகள். பனாரஸ் பாட்டி அந்த அழகியைப் பார்த்து, “ஏண்டியம்மா! உனக்கு கல்யாணம் ஆயிட்டுதோ?’ என்று விசாரித்தாள். 'இல்லை பாட்டி' என்றார் ஏர்ஹோஸ்ட்டஸ். 'உனக்கு எந்த ஊரு?" 'பால்காட்!' 'பாலக்காட்டுப் பெண்ணா நீ? பேஷ்! அதுதான் தமிழ் பேசறே!' - - 'உன் பேரென்ன? ' 'லலிதா.' 'நம் பஞ்சுவுக்கு நல்ல ஜோடி!' என்றாள் அத்தை.