பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வாஷிங்டனில் திருமணம் | நியூயார்க் நகர விமான கூடத்தில் மேரேஜ் கோஷ்டியை வரவேற்க மிஸஸ் ராக்ஃபெல்லர், கேதரின், லோரிட்டா, ஹாப்ஸ், மூர்த்தி, லோசனா முதலானோர் நண்பர்கள் புடைசூழக் காத்திருந்தார்கள். பத்திரிகை நிருபர்களும், காமிராக்காரர்களும் தயாராயிருந்தார்கள். டில்லி பஞ்சுதான் முதன் முதல் விமானத்தைவிட்டு இறங்கினான். மிஸஸ் ராக்பெல்லருக்குக் கல்யாண கோஷ் டியினரை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான். ராக்ஃபெல்லர் சீமாட்டி எல்லோரையும் இன்முகத்துடன் கைகுலுக்கி வரவேற்றுத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாள். அம்மாஞ்சி ஒரு காமிராக்காரரை அணுகி, "என்னை ஒரு நல்ல போஸில் போட்டோ எடுங்களேன்' என்று கூறியபோது, "ஐயோ, இந்த அசடு வேண்டாம் என்று அப்போதே சொன்னேன்' என்று மாமா தலையில் அடித்துக் கொண்டார். விருந்தினர் மாளிகையில் கல்யாண கோஷ் டி தங்குவதற்கு மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். பாட்டிக்கும், அத்தைக்கும் தனியாக ஒரு ரூம். சாஸ்திரிகள் இருவருக்கும் ஒரு ரூம். சம்பந்தி வீட்டாருக்குத் தனி ரூம். பெண்ணின் பெற்றோர், மாமா இவர்களுக்கு ஒரு ரூம். இப்படி அவரவர்களுக்குத் தனித்தனியாக இடம். - டில்லி பஞ்சுவுக்கு ஒரே குஷி, லல்லி லல்லி! என்று சொல்லிக் கொண்டே எந்நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வளைய வந்து கொண்டிருந்தான். வெங்கிட்டுவும் அவர்களோடு கூடக் கூடப் போய்க் கொண்டிருந்தான் பெப்பர்மிண்ட்டுக்காக! "எல்லோரும் குளித்துவிட்டு வாருங்கள். எங்க வீட்டுக் 'குக்கை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்களுக்காக இட்டிலி காப்பி தயாராகிக் கொண்டிருக்கிறது" என்றாள்