பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 35 'டுத் பேஸ்ட் வேண்டுமா சாஸ்திரிகளே? என்று கேட்டான் சமையல் சங்கரன். "பேஸ்ட்டெல்லாம் எதுக்கு? வேஸ்ட்! நான் கையோட ஒரு கட்டு பானியன் ஸ்டிக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் அம்மாஞ்சி. 'பானியன் ஸ்டிக் என்றால் என்னய்யா? " என்று கேட்டார் சாஸ்திரிகள். 'நீர் ஒரு மடிசஞ் சி! 'பானியன் ஸ்டிக் என்றால் ஆலங்குச்சி!' என்றார் அம்மாஞ்சி. 'நான் ஹாட்வாட்'டரில் குளிக்கப் போகிறேன்' என்று தமக்குத் தெரிந்த இங்கிலீவுைச் சொன்னார் சாம்பசிவ சாஸ்திரிகள். நான் ஜில்லுன்னு ஷவர்லே குளிக்கப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டு போன அம்மாஞ்சி, ஷவரில் போய் நின்று குளிக்கத் தொடங்கினார். குளிர் தாங்காமல் போகவே, 'இது ஷவர் பாத் இல்லே... ஷி ஷி ஷிவர் பாத்' என்று நடுங்கியபடியே திரும்பி வந்தார். 'இன்று ஈவினிங்கே நாம் எல்லோரும் வாஷிங்டன் போகிறோம். கல்யாணம் நடத்துவதற்கு வாஷிங்டன் நகரம்தான் ஏற்ற இடம். அந்த நகரில் பொடோமாக் ரிவர்" ஒடுகிறது. ரோடுகள் விசாலமாயிருக்கின்றன என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் சொல்லுகிறார்' என்றான் டில்லி பஞ்சு. 'அயம் விசேஷஹ! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நியூயார்க் ரொம்ப நெரிசலாயிருக்கு. வாஷிங்டனுக்கே போய் விடலாம். நதி தீரத்திலே அமைந்திருக்கிற நகரம்னா சொல்லணுமா என்ன? பாலிகை விடறத்துக்கும் ஸ்நான பானத்துக்கும் செளகரியமா இருக்குமே...' என்றார் சாஸ்திரிகள்.