பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 43 "எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிற மர்மத்தை ஸயண்டிஸ் ட் அம் மாஞ்சி டெலிவிஷன் பேட்டியில் விளக்கிச் சொல்வார்' என்று மாலைப் பத்திரிகைகளில் இன்னொரு செய்தி வெளியாயிற்று ராக்ஃபெல்லர் உறவினர்களுக்கு, கல்யாண கோஷ்டி யினரை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தனர் மூர்த்தி தம்பதியர். அப்புறம் எல்லோரும் கான்ஸ்டிடியூஷன் அவென்யூ வழியாக ஜார்ஜ் டவுனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பக்கத்தில் பக்கத்தில் எட்டுக் கார்கள் செல்லக்கூடிய அளவுக்கு மிக விசாலமா யிருந்தது அந்தச் சாலை. - "ஜானவாச ஊர்வலத்துக்கு ஏற்ற இடம்... ரொம்ப அழகாயிருக்கிறது” என்றார் மாமா. 'நடத்திவிட்டால் போச்சு! அதையெல்லாம் தீர்மானிக்கத்தானே வந்திருக்கோம். நகரம் பூராவையும் ஒரு முறை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிடலாம். பிறகு ஒவ்வொன்றாக முடிவு செய்வோம். ஜார்ஜ் டவுனில்தான் நாமெல்லாம் தங்கப் போகிறோம்' என்றார் மூர்த்தி. 'மெட்ராஸ் மாதிரி இங்கேயும் ஒரு ஜார்ஜ் டவுன் இருக்கிறதா? அப்படீன்னா ரொம்ப செளகரியமாப் போச்சு! கொத்தவால்சாவடி கூட இருக்கும்' என்றார் சாஸ்திரிகள். "ஒய் கொத்த வால் சாவடியும் கிடையாது. கொண்டித்தோப்பும் கிடையாது. பேஷான இடமய்யா இது வந்து பாரும் ஒவ்வொரு வீட்டையும்' என்றார் பஞ்சு. - . . 'நமக்கெல்லாம் ஜார்ஜ் டவுனில் தான் ஜாகை ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்றாள் மிஸஸ்' மூர்த்தி. -