பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வாஷிங்டனில் திருமணம் | பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். காமிராக்காரர்கள் பல கோணங்க்ளில் அவரைப் படமெடுத்துக் கொண்டனர். “உங்கள் பெயர்?' ஒரு நிருபர் கேட்டார். 'அம்மாஞ்சி!' 'நீங்கள் கீழே போட்டீர்களே, அதற்கு என்ன பெயர் : 'என்' “என்ன ஹெல்லா? அதை ஏன் கீழே போட்டீர்கள், ! "நான் ஆகாசத்திலேதான் விட்டேன். அது கீழே விழுந்துவிட்டது.” 'ஹெல்லுக்குள் என்ன இருக்கிறது?" "எண்ணெய்!” "எண்ணெய் என்றால்...?" "ஆயில்...' "ஆயிலா? அவ்வளவு சிறிய வஸ்துக்குள் ஆயிலா? ஒண்டர்புல்!...” என்றனர் நிருபர்கள். அவ்வளவுதான்! வாஷிங்டன் பத்திரிகைகளிலெல்லாம் அம்மாஞ்சியின் புகைப்படத்துடன் "எள்ளுக்குள் ஆயில் இருக்கிறது என்னும் மகத்தான உண்மையைக் கண்டுபிடித்துள்ள இண்டியன் சாஸ்திரி, அதாவது, வலயண்டிஸ்ட்!" என்ற செய்தியைப் பிரசுரித்துப் பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டனர். உடனே அமெரிக்காவிலுள்ள எண்ணெய்க் கம்பெனி முதலாளிகளும், பூதத்துவ ஆராய்ச்சி நிபுணர்களும் அவசரம் அவசரமாக ஸயண்டிஸ்ட் அம்மாஞ்சியைப் பேட்டி காணப் புறப்பட்டுவிட்டார்கள்!