பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 41 ஹெல்ப் பண்ணுகிறவாளாச்சே! அவா தீர்க்காயுசா யிருக்கணும்' என்று ஆசீர்வதித்தார்.அம்மாஞ்சி வாத்தியார். 'இப்போது விமானம் கீழே இறங்கப் போகிறது. எல்லோரும் பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்' என்று எச்சரித்தாள் ஏர்ஹோஸ்ட்டஸ். சாஸ்திரிகளும், அம்மாஞ்சியும் பெல்ட்டை மாட்டிக் கொண்டனர். சாஸ்திரிகளே, உம்ம ஆயுசிலே 'பெல்ட் போட்டுக் கொள்ளுவதற்கு உமக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுது பாரும்!" என்று சாஸ்திரிகளைப் பரிகாசம் செய்தார் அம்மாஞ்சி. 'அது மட்டுமா? சாம்பசிவ சாஸ்திரிகள்... வாஷிங்டன் ரிடர்ன்ட் என்று வேறு சொல்லிக் கொள்ளலாமே! : என்றான் டில்லி பஞ்சு. விமான நிலையத்தில் மேரேஜ் பார்ட்டியை அழைத்துச் செல்ல ராக்ஃபெல்லர் உறவினர்கள் கார்களோடு வந்து காத்திருந்தனர். மேரேஜ் பார்ட்டி வரப் போகிற சேதி இதற்குள் வாஷிங்டன் முழுவதும் பரவிவிடவே, விமான நிலையத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டிருந்தது. 'அம்மாஞ்சி வெளியே பார்த்தீரா கூட்டத்தை... எள்ளுப் போட இடமில்லை' என்றார் சாஸ்திரிகள். அப்படியா!' என்று கூறிய அம்மாஞ்சி வாத்தியார் சட்டென்று இடுப்பில் செருகியிருந்த பொட்டலத்திலிருந்து நாலு எள்ளை எடுத்துப் போட்டுப் பார்த்தார். 'இதெல்லாம் வெள்ளைக்காராள் தேசம். கண்ட இடத்தில் குப்பை போடக் கூடாது' என்றார் சாஸ்திரிகள். அம்மாஞ்சி வாத்தியார் விமானத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம்,