பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாஷிங்டனில் திருமணம் | "ஆமாம்” என்றான் பஞ்சு. "ஹர ஹர என்று அந்த மண்டபத்தை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாஸ்திரிகள். சாஸ்திரிகளே, எதுக்காக இப்போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள்?' அம்மாஞ்சி கேட்டார். 'லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்காளே! மஹாலிங்கம், ஜம்புலிங்கம் மாதிரி அமெரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷம் போலிருக்கு என்றார் சாஸ்திரிகள். சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டுக் குலுங்கிச் சிரித்தனர் அனைவரும். 'பாவம், சிரிக்காதீங்க சாஸ்திரிகள் அப்பாவி மனிதர்! அமெரிக்காவுக்குப் புதுசோல்லியோ? கழுத்திலே லிங்கம் கட்டிக்கிறவாளுக்குத்தான் லிங்கன்னு பேருங்கறது அவருக்குத் தெரியாது' என்று வியாக்கியானம் செய்தார் அம்மாஞ்சி. பேஷ் இவர் அவரைவிட பிரகஸ்பதி!' என்று எண்ணிக் கொண்டான் பஞ்சு. - "எல்லோரும் அங்கே பாருங்கள். கேபிடல் டோம் தெரிகிறது என்றாள் ஏர்ஹோஸ்ட்டஸ். அனைவரும் லல்லி சுட்டிக் காட்டிய அந்தக் கட்டடத்தையே கண் கொட்டாமல் பார்த்தார்கள். "அடேயப்பா இவ்வளவு பெரிய கட்டடம்? இட்டிலிப் பானை மூடி மாதிரி பிரமாண்டமா இருக்கே!' என்று அதிசயப்பட்டனர் அத்தையும், பாட்டியும். 'உலகிலேயே மிகவும் முக்கியமான கட்டடம் இது" என்றான் பஞ்சு. "அமெரிக்காள் சாமான்யப்பட்டவாளா என்ன? இந்தியாவுக்குக் கோடி கோடியா