பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 39 "அதுதான் பொடோமாக் நதி' என்றாள் லல்லி. 'போடா மக்கு நதியா?' என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் சாஸ்திரிகள். 'போடா மக்குமில்லை. வாடா புத்திசாலியுமில்லை... பெடோமாக் என்று சரியாகச் சொல்லும் ' என்று சாஸ்திரிகளைத் திருத்தினார் அம்மாஞ்சி. 'திவ்யமான தீர்த்தம். மெட்ராஸுக்குப் போகிறபோது நாலைந்து செம்பிலே எடுத்துக் கொண்டு போகனும்!" என்றார் சாஸ்திரிகள். 'இது கூட கங்கா தீர்த்தமா என்ன, செம்பிலே அடைத்துக் கொண்டு போவதற்கு? அம்மாஞ்சி வாத்தியார், சாஸ்திரிகளின் அசட்டுத்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டார். "நதிக்குப் பக்கத்திலே குளம் மாதிரி ஒன்று தெரிகிறதே, அது என்னடா பஞ்சு?' என்று கேட்டார் மாமா. 'அதுக்கு டைடல் பேஸின்' என்று பெயர். வாஷிங்டனிலேயே ரொம்ப அழகான இடம் அது. அதைச் சுற்றிலும் இருப்பது ஜப்பான் தேசத்து செர்ரி மரங்கள். ஏப்ரல் மாதத்திலே அந்த மரங்கள் பூத்துக் குலுங்கறபோது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதைப் பார்க்கப் பல தேசங்களிலிருந்து காதலர்கள் ஜோடி ஜோடியாக வருவார்கள்' என்று கூறிக்கொண்டே லல்லியை ஒருமுறை கடைக் கண்ணால் கவனித்தான் பஞ்சு. . சாஸ்திரிகளே! நாம் இரண்டு பேரும் இன்றைக்கே ஜோடியாகப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்து விடலாம்' என்றார் அம்மாஞ்சி. . "அதோ ஒரு மண்டபம் தெரிகிறதே, அதுதான் லிங்கன் மண்டபம்' என்றான் பஞ்சு. 'ஆப்ரஹாம் லிங்கன் மண்டபமா?’ என்று கேட்டார் LD TTLf) ịT.