பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இதுதான் வாஷிங்டன் டி.ஸி. என்றான் டில்லி பஞ்சு. "அதென்னடா டி.ஸி. ஏ.ஸி.ன்னு?... வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?' என்று கேட்டார் மாமா. 'ஒருவேளை இங்கெல்லாம் டி.ஸி. கரெண்ட்டா யிருக்கும்' என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. சாஸ்திரிகளே! உமக்குத் தெரியாவிட்டால் அசட்டுப் பிசட்டென்று உளறாதேயும். டி.ஸி. என்றால் அது இனிஷியலய்யா. இதுகூடத் தெரியாமல் அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்துவிட்டீரே என்று பரிகாசம் செய்தார். 'அது கரெண்ட்டுமில்லை, இன்ஷியலுமில்லை; டி.ஸி. என்றால் டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா என்று அர்த்தம்' என்றான் டில்லி பஞ்சு. 'ஒகோ, அப்படியா விஷயம்?" என்றார் மாமா. விமானம் வாஷிங்டன் நகரை நெருங்கிக் கொண்டிருந்தது. - "அதோ வெள்ளி ரிப்பன் மாதிரி தெரிகிறதே, அது என்னம் மா?' என்று ஏர்ஹோஸ்ட்டஸ் லல்லியைப் பார்த்துக் கேட்டாள் அத்தை.