பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 37 எல்லோரும் கண்ணாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள். வாஷிங்டன் நகரம் தெரிந்தது. "அதோ உயரமாகத் தெரிகிறதே! அது என்ன?' என்று கேட்டாள் அத்தை. 'அதுதான் வாஷிங்டன் மானுமெண்ட். ஞாபகார்த்த ஸ்துபி. 555 அடி உயரம் என்றாள் லல்லி. "பென்சிலைக் கூராகச் சீவிக் குத்திட்டு வைத்திருக்கிற மாதிரியல்லவா கட்டி வைத்திருக்கிறார்கள்?' என்றாள் பாட்டி. "மொட்டையாகக் கட்டியிருந்தால் அப்பளம் உலர்த்த உதவுமே என்று பார்க்கிறாயோ? ' என்று கேட்டார் அம்மாஞ்சி.