பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 55 'தக்ளியை எடுத்துக் கொண்டீரா? பார்க் பெஞ்சிலே உட்கார்ந்து கொண்டிருக்கிற நேரத்திலே நூற்கலாமே!" என்றார் அம்மாஞ்சி. அய்யாசாமி, மூர்த்தி, ஹாப்ஸ் தம்பதியர், பிள்ளை வீட்டுக்காரர்கள் எல்லோரும் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். "எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? என்று அம்மாஞ்சியைப் பார்த்துக் கேட்டார் மூர்த்தி. 'மண்ட்ரோஸ் பார்க் வரை வாக்கிங் புறப்பட்டோம். டம்பர்ட்டன் ஒக்ஸ் பங்களாவைப் போய்ப் பார்த்தீர்களா? வசதியாக இருக்கிறதா?’ என்று கேட்டார் அம்மாஞ்சி. 'ரொம்ப செளகரியம். இரண்டு வீடுகளும் கூப்பிடு தூரத்தில் இருக்கின்றன. நீங்களிருவரும் சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்கள் என்றார் அய்யாசாமி. "ஒ எஸ் ஸெவன் தர்ட்டிக்குள் வந்துவிடுகிறோம்" என்றார் சாஸ்திரி. - .. 'அவ்வளவு நேரம் ஆகுமா?' என்று கேட்டார் அய்யாசாமி. ஆறரை மணிக்குள் என்றுதான் சாஸ்திரிகள் சொல்ல நினைத்தார். ஆனால் அவருக்கு ஆறரை என்பதற்கு இங்கிலீஷ் தெரியாது. லெவன் தர்ட்டி என்கிற வார்த்தைதான் தெரியும். எனவே, தெரிந்த இங்கிலீவுைச் சொல்லி வைத்தார். - சாஸ்திரிகள் உளறுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட 'அம் மாஞ்சி, 'நாங்க வலிக் ஸ் தர்ட்டிக்குள் வந்துவிடுகிறோம்.' என்று சொல்லி அனுப்பினார்.