பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாஷிங்டனில் திருமணம் | 'நடந்து போவது மட்டும் குபேர புத்தியாக்கும்?...' என்றார் சாஸ்திரி. 'அதற்கு வாக்கிங்' போவது என்று பெயர். அதோ பாரும், எத்தனை பேர் ஜோடி ஜோடியாக வாக்கிங் போகிறார்கள் என்று...' 'அவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்?" 'சிலபேர் சர்க்காரமாவுக்குப் போவார்கள். சில பேர் ஷாப்பிங் போவார்கள். ' 'எனக்கும் கொஞ்சம் ஷாப்பிங் போகணும்' என்றார் சாஸ்திரிகள். - 'எதுக்கு?” 'புது வருஷத்துப் பஞ்சாங்கம் வந்திருந்தால் வாங்கனும்!" சாஸ்திரிகளே, யாராவது சிரிக்கப் போறா... வாயை மூடிக் கொண்டு என்னோடு வாரும். மண்ட்ரோஸ் பார்க் பக்கமாகப் போய்விட்டு வரலாம்.' 'உமக்கு வழி தெரியுமா?" “தெரியாமல் என்ன? சம்பந்தியாத்துக்காராள் தங்கப் போறாளே டம்பர்ட்டன் ஒக்ஸ், அந்த வீட்டைத் தாண்டி ஆர். ஸ்ட்ரீட் வழியா நடந்தால், கொஞ்ச தூரத்தில் மண்ட்ரோஸ் பார்க் நாம் தங்கியிருக்கிற சம்மர் ஹவுஸ் மேல் மாடியிலேயிருந்து பார்த்தாலே தெரியறதே!' 'வாஷிங்டன் நகரத்தையே நீர்தான் நிர்மாணித்த மாதிரி அல்லவா பேசுகிறீர்?" என்றார் சாஸ்திரிகள்.