பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 53 பார்த்தால் லாரல் அண்ட் ஹார்டியைப் போல் இருக்கிறது. என் டாடியும், மம்மியும் பிரைட்க்ரூம் பார்ட்டியுடன் 'டம்பர்ட்டன் ஒக்ஸ் மாளிகையைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். மேரேஜ் அநேகமாக ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் டேட்' நிச்சயமாகவில்லை. 'டுமாரோ'வுக்குள் எல்லாம் தெரிந்துவிடும். நீ இல்லாமல் எனக்கு இங்கே பொழுதே போகவில்லை. உன் ஹஸ்பெண்டுடன் நீ அடுத்த வாரமே வாஷிங்டன் வந்துவிடு. இங்கே 'ஸ்ப்ரிங் ஆரம்பமாகப் போகிறது. செர்ரி பிளவர்ஸ், டாக்வுட், டுலிப்ஸ், மக்னோலியா எல்லாம் வெரி வெரி பியூட்டிபுலா யிருக்கும். இந்த ஸம்மர் ஹவுஸ் கார்டனில் பெரிய பெரிய மரங்கள் இருக்கின்றன. நீ வந்தால் அவற்றிலே ஊஞ்சல் கட்டி விளையாடலாம். ரொம்ப ஜாலியாக இருக்கும். உன் அன்புள்ள, லோரிட்டா. பி.கு : நீ வரும்போது எனக்கு ஆறு டின் கமர்கட் வாங்கி வரவும். ★ ★ ★ 'சாஸ்திரிகளே மணி மூன்றாகப் போகிறது. வெளியே கொஞ்ச தூரம் வாக்கிங் போய்விட்டு வரலாமா?' என்று கேட்டார் அம்மாஞ்சி. 'சைக்கிள் இருந்தால் ஜார்ஜ் டவுன் முழுதுமே ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்துவிடலாம்' என்று ஆசைப்பட்டார் சாஸ்திரிகள். 'உம் தரித்திர புத்தி உம்மை விடவில்லையே! வாஷிங்டனில் வந்து சைக்கிளில் போகிறாராம்' என்றார் அம்மாஞ்சி.