பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் போர் அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. என்ன இருந்தாலும் 'டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்"சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் கொண்டாள். வசந்தாவின் நினைவு தோன்றவே, உடனே தன் தோளி'க்கு லெட்டர் எழுதப் போய்விட்டாள். டியர் வசண்டா இப்போது நான் மேரேஜ் பார்ட்டியுடன் வாஷிங்டன் வந்திருக்கிறேன். என் டாடியும், மம்மியும், உன் டாடியும், மம்மியும் இங்கேதான் இருக்கிறார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லர் ஒன் மினிட் கூட ஒய்வில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார். மேரேஜ் ரொம்ப கிராண்டாக நடக்கும் போலிருக்கிறது. இங்கே சம்மர் ஹவுஸைச் சுற்றிலும் பியூட்டிஃபுல் கார்டன்! ஃபிளவர்ஸ் வெரி நைஸ்! ஆனால் டாஞ்சூர் ஃபிளவர்ஸ் மாதிரி வாசனை இல்லை. அம்மாஞ்சி - ஸாஸ்ட்ரி என்று இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். வெரி ஹ்யூமரஸ் பீபிள் அவர்களைப்