பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 51 "துணி உலர்த்துவதற்குத்தான் கொடியே இல்லை' என்றாள் அத்தை. 'கொடி என்றால் என்ன? 'வென்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். "Flag என்று அம்மாஞ்சி தமக்குத் தெரிந்த இங்கிலீஷில் அதை மொழி பெயர்த்துச் சொன்னபோது லல்லியும், பஞ்சுவும் சிரித்துவிட்டு, கொடி என்றால் என்ன என்பதை மிஸ்ஸ் ராக்ஃபெல்லருக்குப் புரியும் படி விளக்கிச் சொன்னார்கள். "தெருவில் முகூர்த்தப் பந்தல் போடுகிறபோது அந்த ஆட்களிடம் சொல்லி அப்படியே கொடியும் கட்டிக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ராக்ஃபெல்லர் மாமியைத் தொந்தரவு செய்யக் கூடாது' என்றாள் பெண்ணுக்கு egy LDLDT. "சரி, மாடியில் ஹெலிகாப்டர் ரெடியாயிருக்கிறது. அத்தை, பாட்டி, மிஸஸ் மூர்த்தி, லல்லி நாலு பேரும் வாருங்கள் போகலாம் ' என்று அழைத்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். வெங்கிட்டுவும் அவர்களோடு தொற்றிக் கொண்டான். அத்தை, பாட்டி ஜமா'வை ஏற்றிக் கொண்ட ஹெலிகாப்டர் ஜம்மென்று வானில் பறக்கத் தொடங்கியது.