பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாஷிங்டனில் திருமணம் | 'ரொம்ப செளகரியமாப் போச்சு. ஒவ்வொரு மாடியாக ஏறி இறங்கனுமே என்று பயந்து கொண்டிருந்தேன். என்றாள் அத்தை. பகல் ஒரு மணி இருக்கும். எல்லோரும் கிளம்பி, வழியிலுள்ள தெருக்களையெல்லாம் பார்த்துக்கொண்டே ஸ்ம்மர் ஹவுஸுக்குப் போனார்கள். 'ஜார்ஜ் டவுன் ரொம்ப நன்றாயிருக்கிறது. பேஷான வீடுகள். தெருக்களும் அகலமாயிருக்கின்றன. ஷாப்புக்களும், ஸ்டோர்களும் நிறைய இருக்கின்ற்ன. என்றார் அய்யாசாமி. - "வெற்றிலை பாக்குக் கடைதான் இல்லை..." என்று குறைப்பட்டார் அம்மாஞ்சி. - 'ஏன்? பொடி மட்டை காலியாகிவிட்டதோ?” என்று கேட்டார் சாஸ்திரிகள். பேசிக் கொண்டே எல்லோரும் ஸ்ம்மர் ஹ வுலை அடைந்தார்கள். 'அடாடா எவ்வளவு பெரிய மாளிகை மயனே சிருஷ்டித்த மாதிரி அல்லவா இருக்கிறது?" என்று யந்தார் மாமா. "இந்த இடம் போதுமா? என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். - . 'ஏதேஷ்டம்; முகூர்த்தத்தை இந்த வீட்டில்தான் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அய்யாசாமி. 'வீடா இது? மாளிகை என்று சொல்லும் என்று திருத்தினார் சாஸ்திரிகள். 'மெட்ராஸ் கோவிந்தப்ப நாயக்கன் தெரு சத்திரம் கெட்டுது போங்க என்றார் அம்மாஞ்சி. 'இதிலே ஒரு ரூமுக்கு இணையாகுமா அது' என்றார் 、 சாஸ்திரிகள்.