பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 49 'ஸ்நானம் செய்ய பெர்டோமாக் ரிவருக்குப் போயிருந்தோம். அங்கே ஜனங்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் பெரும் பாடாகிவிட்டது. எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது என்கிற ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டேனாம். நல்ல வேளை எள்ளையே நான்தான் கண்டுபிடித்தேன் என்று சொல்லாமல் விட்டார்களே!' என்றார் அம்மாஞ்சி. 'ஒரு மணிக்கு நாம் எல்லோரும் மிஸஸ் ராக்ஃபெல்லருடன் வெளியே போய் டம்பர்ட்டன் ஒக்ஸ்", "ஸ்ம்மர் ஹவுஸ் ஆகிய இரண்டு மாளிகைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். ரொம்பப் பெரிய மாளிகையாம். ஒன்றில் பெண் வீட்டுக்காரர்களும், இன்னொன்றில் பிள்ளை வீட்டுக்காரர்களும் இறங்கிக் கொள்ளலாம் என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் சொல்கிறார்..." என்றார் மூர்த்தி. 'ராகு காலத்துக்கு முந்தியே புறப்பட்டு விடலாமா?" என்று கேட்டார் மாமா. 'முக்கியமாக அப்பளம் இடுவதற்கும், உலர்த்து வதற்கும் இடத்தைப் பார்த்து முடிவு செய்யணுமே...' என்று கவலைப்பட்டாள் அத்தை. "ஸ்ம்மர் ஹவுஸில் நமக்காக ஹெலிகாப்டர் காத்துக் கொண்டிருக்கிறதாம். மிஸஸ் ராக்ஃபெல்லர், அத்தையை யும், பாட்டியையும் ஹெலிகாப்டரில் அழைத்துக் கொண்டு போய், வாஷிங்டனிலுள்ள மொட்டை மாடி களையெல்லாம் ஒன்றுவிடாமல் காட்டப் போகிறாளாம். எந்த மாடி தேவையானாலும் அந்த மாடியில் அப்பளம் உலர்த்துவதற்கு சர்க்காரிடம் பர்மிஷன் வாங்க முடியுமாம்...' என்றாள் மிஸஸ் மூர்த்தி. 'ஹெலிகாப்டரில் ஏரியல் ஸர்வேயா?' என்று கேட்டார் மாமா. . . -