பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வாஷிங்டனில் திருமணம் I கொண்டார் அம் மாஞ்சி. ஈரமாக இருந்த விபூதி உலர்ந்தபோது அம்மாஞ்சியின் நெற்றியில் பட்டையாக மூன்று வெள்ளைக் கோடுகள் பளிச்சிட்டன. அதைக் கண்டுவிட்டப் பத்திரிகை நிருபர்கள் பாய்ந்தோடி வந்து, அம்மாஞ்சியையும், சாஸ்திரிகளையும் நிற்க வைத்துப் படமெடுத்துக் கொண்டார்கள். நெற்றியில் பளிச்சிட்ட மூன்று கோடுகளையும் ஒரு நிருபர் இஞ்ச் டேப்பால் அளந்து கொண்டு போனார். 'டு இண்டியன் ஸயண்டிஸ்ட்ஸ் டேக் தேர் பாத் இன் ரிவர் பொடோமாக்' 'தி nக்ரெட் ஆப் தி லேக்ரட் பவுடர்' என்று பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அமெரிக்க மக்கள் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தனர். அம்மாஞ்சியும், சாஸ்திரிகளும் செர்ரி மரத்தில் உலர்த்தியிருந்த வேட்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுகிறபோது காமிராக்காரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். 'அடாடா இந்த நிருபர்கள் நம்மை வேஷ்டி மாற்றிக் கொள்ளக் கூட விடமாட்டார்கள் போலி ருக்கே!' என்றார் சாஸ்திரிகள். "அது மட்டுமா? டெலிவிஷன்லே வேறே இன்டர்வியூ இருக்காம்' என்றார் அம்மாஞ்சி. “நீர் எள்ளைப் பற்றிப் பேசும்; நான் விபூதியைப் பற்றி ஒரு லெக்சர் அடிச்சுடறேன்' என்றார் சாஸ்திரிகள். அவர்களிருவரும் ஜாகைக்குத் திரும்பி வந்ததும், "இரண்டு பேரும் எங்கே போய்விட்டீர்கள் இவ்வளவு நேரம்? மணி பன்னிரண்டு ஆகப் போகிறதே... வந்த வேலையைக் | கவனிக்க வேண்டாமா?...' என்று கேட்டார் அய்யாசாமி.