பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 47 'துணியால் ஓங்கி அடித்துக் கல்லை உடைக்கப் பார்க்கிறார்...' என்றார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வர்களில் ஒருவர். சாம்பசிவ சாஸ்திரிகளைச் சுட்டிக்காட்டி, 'அவர் குருஷேவ் மாதிரி இருக்கிறார் என்றார் ஒர் அமெரிக்கர். 'ஒருவேளை குருஷேவ்தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாரோ, என்னவோ? என்றார் இன்னொரு அமெரிக்கர். 'டஃப்ட் இருக்கிறதே!' என்றார் மற்றொருவர். இதற்குள் அம்மாஞ்சி ஈர வேட்டியைப் பிழிந்து கொசுவி ஒற்றைக் கையால் நாலு தடவை தும்முகிற மாதிரி படார் படார்’ என்று உதறினார். கரையில் கூடியிருந்தவர்கள் அதைக் கண்டு சிரித்தார்கள். "வேட்டியைப் பிழிந்து உதறுவதைக்கூட ஒரு பெரிய கலை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே இந்த அமெரிக்கர்கள் என்றார் அம்மாஞ்சி. வேட்டியை செர்ரி மரம் ஒன்றில் கட்டிக் காய வைத்துவிட்டு, இருவரும் நதியில் முங்கிக் குளித்தார்கள். சாஸ்திரிகள் தண்ணீரில் முங்கி எழுகிறபோதெல்லாம் 'ஹாரி ஹாரி என்று ஹரி நாமத்தைச் சொல்லிக் கோஷித்தார். கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி (Harry) என்ற பெயருடைய வர்கள் எல்லாம் தங்கள் பெயரைத் தான் சொல்லுகிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள். குளித்து முடித்ததும், சம்புடத் திலிருந்து விபூதியை எடுத்துக் குழைத்து நெற்றியில் இட்டுக்