பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாவி 71 மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அந்தச் சத்தம் மிகவும் பிடித் திருந்தது. "ஒ வாட் எ மியூஸிகல் ஸ்வுண்ட்! இந்த ஸ்வுண்ட் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்குமா?' என்று விசாரித்தார் மிஸஸ் ராக். 'ராட்டினத்துக்கு கிரீலோ, எண்ணெயோ போடாமலிருந்தால் இந்த ஸ்வுண்ட் எப்போதும் வந்து கொண்டிருக்கும். அதுமட்டுமல்ல; இன்னும் பல தினுசான சவுண்டுகள் கூட வரும்!' என்றான் பஞ்சு. "பஞ்ச் அப்படின்னா இந்த ராட்டினத்துக்கு யாரும் எண்ணெய் போட்டுவிடாமல் உஷாராகப் பார்த்துக்கணும். இப்பவே இங்கே ரெண்டு வாச்மேன் போட்டுவிடுங்க. யாராவது எண்ணெய் போட வந்தால் அதைத் தடுத்துடனும்' என்றாள். 'சரி, மேடம்' என்றான் பஞ்சு. 'எனக்கு இந்த வெல்லிலேயிருந்து வாட்டர் புல் பண்ணிப் பார்க்கணும் போல ஆசையா யிருக்குது' என்று கூறித் தண்ணீர்க் குடத்தைத் தானே இழுத்துப் பார்த்தாள். புதுத் தாம்புக் கயிறு ஆனதால் அந்தச் சீமாட்டியின் கைகள் சிவந்து எரிச்சலெடுத்தன. உடனே கைகளுக்கு க்ளவுஸ்" போட்டுக் கொண்டு சேத்தினாள். குடம் தர்றுமாறாக ஊசலாடி நக் கென்று சுவரில் மோதவே ஒட்டையாகித் தண்ணி ரெல்லாம் கீழே போய் விட்டது. அதைக் கண்டு 'வெரி ஸாரி பஞ்ச்! குடம் பஞ்சர் ஆகிவிட்டது' என்று சொல்லி வருத்தப்பட்டாள். SATAAASAAAS дFpt.АМ 5соке родxt, o 2. »%о. ** - "பரவாயில்லை மேடம் வெல்டு' பண்ணி விடலாம்' என்றான் பஞ்சு, !