பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வாஷிங்டனில் திருமணம் 'இதுதான் வெல்" என்றான் பஞ்சு. 'வெரி குட் மிஸ்டர் பஞ்ச் வெல் ரொம்ப நல்லாயிருக்குது என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு முன்னால் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்த வேண்டும்' என்றாள் காவேரிப் பாட்டி. “சரி, அம்மாஞ்சி வாத்தியாரைக் கூப்பிடு' என்றார் அய்யாசாமி. அம்மாஞ்சி வாத்தியார் வந்து தேங்காய் உடைத்தார். அதைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லர் ஆச்சரியத்துடன் "தேங்காயைச் சம அளவில் வட்டமாக எப்படி உடைத்தார்?' என்று கேட்டாள். "தட் இஸ் தி இண்டியன் ஆர்ட்!” என்றான் பஞ்சு. தேங்காய்க்குக் குடுமி வைத்திருப்பதைக் கண்டுவிட்டு டஃப்டட் கோகனட் என்று சொல்லிச் சிரித்தாள் மிஸஸ் ராக். - 'ஏண்டா பஞ்சு அமெரிக்காவிலே தேங்காய்க் கெல்லாம் கிராப்பு வைப்பாளாமா?' என்று கேட்டாள் பாட்டி. 'சரி, பூஜையாகிவிட்டது. இனி தண்ணீர் எடுக்கலாம். தாம்புக் கயிறு இருக்கிறதா?’ என்று கேட்டார் அய்யாசாமி. 'நாலு டஜன் தாம்புக் கயிறு கொண்டு வந்திருக்கிறேன், .போதுமா?" என்றான் பஞ்சு سہما - د - س --%T அப்யாசாமி, குடத்தில் தாம்புக் கயிற்றைச் சுருக்கிட்டுத் தண்ணிர் சேந்தினார். ராட்டினம் கிறீச் கிறீச்' என்று சத்தமிட்டது. -