பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 69 டிலேயே ஏற்றி அனுப்பி விடலாம் ' என்றான் பஞ்சு. 'நாளைக்கே அப்பளம் ஒர்க்ஸ்ை பிகின் பண்ணிட லாமில்லையா?" என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். “நாளைக்கு எப்படி முடியும் கிணறே வெட்டி ஆகவில்லையே?’ என்று கூறினாள் தஞ்சாவூர் காவேரிப் பாட்டி 'கிணறா? அப்படீன்னா?' என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். . “வெல்...' என்றான் பஞ்சு. “வெல் எதுக்கு?' 'உளுந்தை ஊறப் போடறதுக்கு வெல்வாட்டர்தான் வேணும். இவர்களெல்லாம் வெல் வாட்டர்லேதான் ஸ்நானம் செய்வார்கள்’’ என்றார் அம்மாஞ்சி. 'அப்படின்னா இம்மீடியட்டா பெரிய வெல்லாக ஒன்று வெட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிடலாமே!" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'நாளைக்குக் காலையிலே பந்தல் போடறவங்களும் பத்துப் பாத்திரம் தேய்க்கிறவங்களும் வராங்க. பந்தல் போடுகிற ஆசாமிகளை விட்டால், ஒரே நைட்லே கிணறு வெட்டி ராட்டினமும் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்" என்றான் பஞ்சு. மறுநாளே பந்தல்காரர்கள் வந்ததும் அவர்களைக் கொண்டு பெரிய கிணறு ஒன்றை வெட்டி, ராட்டினமும் போட்டுவிட்டான் பஞ்சு. கிணற்றை வந்து பார்த்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.