பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வாஷிங்டனில் திருமணம் I "ஹவ் டு யூ டு என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் அவர்களை விசாரித்தபோது பாட்டிமார்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். அப்போது பஞ்சு குறுக்கிட்டு, "ஓ! தே டு ஒண்டர்புல் அப்ளம்ஸ்' என்று ஹாஸ்யமாகச் சொல்லவே எல்லோரும் சிரித்துவிட்டனர்! பாட்டிமார்களில் பாதிப் பேர் சம்மர் ஹவுஸிலும் மற்றப் பாதிப் பேர் டம்பர்ட்டன் ஒக்ஸிலும் இறக்கப்பட்டனர். 'இவர்களுக்கெல்லாம் இப்போது என்ன ஆகாரம் கொடுப்பது? டீயும் பிஸ்கெட்டும் கொடுக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'சிவ சிவா! இன்றைக்கு ஏகாதசி இவர்கள் பச்சைத் தண்ணீர் கூடத் தொடமாட்டார்கள். க்ளின் பட்டினிதான்!' என்றான் பஞ்சு. 'ஏகாடஸிக்கு ஏன் பட்டினி இருக்கணும்?' என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'அப்போதுதான் வைகுண்டம் போவார்களாம்!" என்றான் பஞ்சு. 'வைகவுண்ட்லே போகணுமா? எத்தனை வைகவுண்ட் வேணுமானாலும் நான் 'அரேஞ்ச்" பண்ணுவேனே!" என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'வைகவுண்ட் இல்லை. வைகுண் டம். அது மேலே இருக்கிறது' என்றான் பஞ்சு. வைகவுண்ட் கூட மேலேதான் போகும்' என்றாள் மிஸஸ் ராக். "சரி, அவங்க வந்த வேலை முடியட்டும். அப்புறம் வைகவுண்ட்