பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி . 67 இண்டியாவை நோக்கிப் பறந்தன. இந்த ட்ரிப்பில் பஞ்சு -லல்லி நட்பு ரொம்ப ரொம்ப உயர்ந்துவிட்டது. விமான்க் காதல் ஆயிற்றே! "ஈவினிங் மூன்று மணிக்கு மெட்ராஸிலிருந்து ப்ளேன்ஸ் அரைவிங். எ பார்ட்டி ஆப் பாட்டீஸ் ப்ரம் பால் காட், டின்னவெல்லி அண்ட் டாஞ் சூர் கமிங். அவர்களை ரீnவ் பண்ண நாம் ஏர்போர்ட் போக வேண்டாமா?' என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். 'கட்டாயம் போகத்தான் வேணும் ' என்றாள் மூர்த்தியின் மனைவி லோசனா. 'அவங்களுக்கு கார்லண்ட்’ போட்டு ரிஸிவ் செய்ய வேணுமா, இல்லே... இண்டியன் கஸ்டம்ஸ் எப்படி?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். கார்லே அழைத்துக் கொண்டு வந்தால் போதும்' என்றார் அய்யாசாமி. 'ஏர்போர்ட்லே அவங்களுக்காக நூறு கார் வெயிட் பண்ணச் சொல்லியிருக்கேன். சீக்கிரம் புறப்படுங்க. போகலாம்' என்றாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். பாலக்காட்டுப் பாட்டிகளுக்கு ஒரு விமானம். டின்னவெல்லி பாட்டிகளுக்கு ஒரு விமானம். டாஞ்சூர் பாட்டிகளுக்கு ஒரு விமானம். உளுந்து, உலக்கை, உரல் முதலிய சாமான்களுக்கு ஒரு விமானம் - ஆக நாலு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறங்கின. அவற்றிலிருந்து வரிசை வரிசையாக இறங்கி வந்த பாட்டிமார்களைக் கண்ட மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஏர்ஹோஸ்ட்டஸ் லல்லி, பால்காட் பாட்டிமார்களின் லீடரான துளசிப் பாட்டியை அறிமுகப் படுத்தினாள். டாஞ்சூர் குரூப் லீடர் காவேரிப் பாட்டி, டின்னவெல்லி குரூப் லீடர் சேஷிப்பாட்டி இவ்விருவரையும் பஞ்சு அறிமுகப்படுத்தினான்.